சில மனிதர்கள் நம்மை விட்டு சென்ற போதும், அவர்களின் நினைவு நம்மை விட்டு நீங்குவதில்லை.
அப்படி ஒரு மனிதர் தான் எங்க Automan.
அவரோட பேர் “ஆரோக்கிய தாஸ்”னே, எனக்கு 5th படிக்கும் போது தான் தெரியும்.
ஏன்னா நாங்க அவர Automanனு தான் கூப்பிடுவோம்.
அவருக்கு ஸ்கூல் ஆட்டோ சவாரி ஓட்டுவது தவிர நிறைய வேலை இருக்கும்.
ஒரு ஸ்கூல் watchman, அதே ஸ்கூல்ல செடி வளர்த்து பராமரிப்பது, ஸ்கூல் வாசல்ல மாங்கா, புளியம்பழம் விப்பதுனு, All time busy எங்க Automan.
அவரு எங்கள ஸ்கூல்க்கு correct timeக்கு கூட்டிட்டு போய் விட்டது விட, late ஆ விட்டது தான் அதிகம்.
ஸ்கூல் gate மூடியிருபாங்க பல சமயம்.அப்புறம் எங்க ஸ்கூல் watchman கிட்ட அவரு எதையாவது பேசி உள்ள அனுப்பி வைப்பாரு.
ஸ்கூல் முடிஞ்சதும் வீட்டுக்கு கூட்டிட்டு போறப்போ, அவரோட friends (மத்த Automanகளோடு) race வச்சு விளையாடுவாரு.
“ஆரி” இப்படி தான் அவரோட friends அவர கூப்பிட்டுவாங்க. நல்ல jolly type எங்க Automan.
என் snacksஅ recessல சாப்பிடாம, சாயங்காலம் Automan கூட share பண்ணது நல்லா ஞாபகம் இருக்கு.
Saturday எங்களுக்கு ஸ்கூல் Half day. இது எங்க Automanக்கு நிச்சயமா மறந்துடும். எங்க ஸ்கூல் பக்கத்தில இருக்கிற, ஒரு ரூபாய் phoneல கால் பண்ணி சொல்லனும், அப்பத்தான் வருவாரு. வந்ததும் “ஏன் மறந்தீங்க” னு எங்ககிட்ட திட்டு வாங்கிட்டு, வீட்டுல படம் பாத்துகிட்டே இருந்தேன்னு அந்த படத்தோட கதைய சொல்லி சமாளிப்பாரு.
எங்க வீட்டு தெரு முனையில ஒரு சமோஸா, பஜ்ஜி விக்குற கடை இருக்கும். அத cross பண்ணி போகும் போதெல்லாம் ஒரே dialogue சொல்லுவாரு, “சமோஸா, வாங்கி தரேன், இன்னிக்கு இல்ல, நாளைக்கு”.
தினமும் இதே வசனம் தான். அவரோட குரல்ல இந்த dialogue இன்னும் என் காதுல ஒலிக்குது. ஆன அந்த ‘நாளைக்கு’ மட்டும் வந்ததே இல்ல.
நாங்க ஸ்கூல் படிப்பு முடிக்கும் முன்னவே அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போயிடுச்சு. ஆட்டோ ஓட்ட முடியல அவரால. நிறைய smoke பண்ணுவாரு, நாங்க எவ்ளோ நிறுத்த சொல்லியும் கேக்கமாட்டாரு. ஸ்கூல் படிப்பு முடிஞ்சு கொஞ்சம் வருடம் கழிச்சு அவர பார்த்தது, அவரோட கண்ணீர் அஞ்சலி posterல தான்.
இன்னிக்கும், Ola Uberல ஆட்டோ book பண்ணும் போது நாங்க நினைப்பது, “நம்ம Automan இருந்திருந்தா அவரே நம்மள கூட்டு போயிருப்பாருல!”
சில மனிதர்கள் நம்மை விட்டு சென்ற போதும், அவர்களின் நினைவு நம்மை விட்டு நீங்குவதில்லை.
-சந்தோஷி உமா மோகன்
Life is a melange of emotions!
Rank | Name | Points |
---|---|---|
1 | Manish_5 | 400 |
2 | Srivats_1811 | 287 |
3 | Infinite Optimism | 125 |
4 | AkankshaC | 93 |
5 | Udeeta Borpujari | 86 |
6 | Rahul_100 | 68 |
7 | Pourelprakriti | 59 |
8 | Anshika | 53 |
9 | Srividya Ivauri | 52 |
10 | WriteRightSan | 52 |
Rank | Name | Points |
---|---|---|
1 | Udeeta Borpujari | 551 |
2 | Kimi writes | 508 |
3 | Srivats_1811 | 311 |
4 | Sarvodya Singh | 279 |
5 | Anshika | 262 |
6 | Rahul_100 | 242 |
7 | AkankshaC | 195 |
8 | Infinite Optimism | 179 |
9 | Rahul Gupte | 171 |
10 | shruthi.drose | 142 |
Feedback
WriteRightSan on 12 Jul 2024
💜
WriteRightSan on 10 Jul 2024
❤️
WriteRightSan on 09 Jul 2024
💜
WriteRightSan on 14 Jun 2024
How did you all commute to school?
WriteRightSan on 13 Jun 2024
தங்கள் கதைகளை பதிவு செய்யவும்!
Mritivmohan on 12 Jun 2024
👌
WriteRightSan on 12 Jun 2024
Thank you!
WriteRightSan on 11 Jun 2024
PS: This story is written based on true incidents!
WriteRightSan on 10 Jun 2024
My first story in thinkingships! Follow me for more stories!
WriteRightSan on 11 Jun 2024
Thank you!
Srivats_1811 on 10 Jun 2024
👍